Propellerads
Navigation

வரலட்சுமிக்கு குவியும் வாய்ப்புகள்

வரலட்சுமி சரத்குமார் திறமையான நடிகையாக இருந்தாலும், ராசியில்லாத நடிகை என்ற பெயரும் அவரை துரத்திக் கொண்டிருக்கிறது. அவர் நடிகையாக அறிமுகமான போடா போடி படு தோல்விப்படம். அடுத்து நடித்த மதகஜ ராஜா படம் வெளிவரவே இல்லை. பாலா இயக்கத்தில் நடித்த 'தாரை தப்பட்டை' படமும் படு தோல்வி.

அதன் பிறகு நடந்ததுதான் ஆச்சர்யம். நிபுணன், அம்மாயி, சத்யா, விக்ரம் வேதா என ஒரே நேரத்தில் 4 படங்கள் வரலட்சுமி சரத்குமாருக்கு கமிட்டாகின. அதனால் பிஸி நடிகையாகி விட்ட வரலட்சுமிக்கு இப்போது 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' என்ற படமும் கமிட்டாகி இருக்கிறது. இந்தப்படத்தின் மூன்று ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களை இயக்குநர் மணிரத்னம், பாலா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் வெளியிட்டனர்.

வரலட்சுமியின் படப் பட்டியலில் புதிதாக மேலும் சில படங்கள் இணைய இருக்கின்றன. அவற்றில் சித்தார்த் நடிக்கும் படமும் அடக்கம்.
Share
Banner

Post A Comment: