சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான 'ராப்தா' படத்தின் டிரைலரை பார்த்தவர்கள் அதில் வரும் ஒரு வித்தியாசமான மனித உருவத்தை பார்த்து ஒரு கணம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்திருப்பார்கள் என்பது நிச்சயம்..
சுஷாந்த் சிங் ராஜ்புத், கிரீத்தி சனான் ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தை தினேஷ் விஜன் என்பவர் இயக்கியுள்ளார்.. இந்தப்படத்தில் தீபிகா படுகோனேவும் ராஜகுமார் ராவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்கள்..
இப்போது மேலே சொன்ன ஆச்சரயமான விஷயத்துக்கு வருவோம்.. ட்ரெய்லரில் தென்பட்ட அந்த விசித்திர உருவத்துக்கு சொந்தக்காரர் இந்த ராஜ்குமார் ராவ். 32 வயதேயான ராஜ்குமார் ராவ் 324 வயது மனிதனாக இந்தப்படத்தில் நடித்துள்ளது இந்தப்படத்தின் ஹைலைட்டுகளில் ஒன்று.
இந்த தோற்றத்தை கொண்டு வருவதற்காக சுமார் ஆறுமணி நேரத்திற்கு மேலாக மேக்கப்பிற்கு ஒத்துழைத்துள்ளார் ராஜ்குமார் ராவ். இந்த மேக்கப்பிற்காவே லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து ஒரு ஸ்பெஷல் டீமை வரவழைத்தார்களாம்.
Post A Comment: