ராஜாராணி, தெறி படங்களை இயக்கிய அட்லி, தற்போது விஜய் நடிப்பில் அவரது 61-வது படத்தை இயக்கி வருகிறார். விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் இந்த படத்தின் தலைப்பை விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.
அதோடு, மூன்று முகம்என்ற ரஜினி படத்தின் தலைப்பை வைத்திருப்பதாக ரசிகர்கள் தரப்பில் இருந்து டிசைனுடன் பரபரப்பு செய்திகளும் அவ்வப்போது இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
அதையடுத்து, விஜய் 61வது படத்தின் டைட்டில் மூன்று முகம் அல்ல என்று மறுத்த அட்லி, விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்று சொல்லி விஜய் ரசிகர்களை தற்போதைக்கு அமைதிப்படுத்தி வைத்துள்ளார்.
இந்த நிலையில், தனது ஏ பார் ஆப்பில் நிறுவனம் சார்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்றொரு படத்தையும் தயாரித்துள்ளார் அட்லி. புதுமுக இயக்குனர் ஹைக் என்பவர் இயக்கும் இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீதிவ்யா, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தை மே மாதம் 19-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார் அட்லி. முன்னதாக, படத்தின் ட்ரெய்லர், பாடல்களை நாளை (ஏப்ரல் 24-ந்தேதி) கமல்ஹாசனை வைத்து வெளியிடுகிறார் அட்லி.
Post A Comment: