அஜீத் நடித்து வரும் “விவேகம்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தின் கதை வெளிநாட்டில் நடைபெறுவது போன்று இருப்பதால் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில்தான் படமாக்கப்பட்டுள்ளன. எனவே, காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இயக்குநர் சிவா, பல ஐரோப்பிய கலைஞர்களை பயன்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
ஹொலிவுட் திரைப்படங்களில் பணியாற்றிய துணை நடிகர்கள், சண்டைக் கலைஞர்களும், இந்த திரைப்படத்தில் நடித்துள்ளதால் இந்த திரைப்படத்தை பார்க்கும்போது இது தமிழ்ப்படமா? அல்லது ஹொலிவுட் திரைப்படமா? என்று தோன்றும் அளவுக்கு இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி காட்சி அமைப்புகளும் ஹொலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டு வருவதால் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களால் பெரிதும் இரசிக்கப்படும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Post A Comment: