Propellerads
Navigation

கண்கலங்கிய அமலாபோல்

தனது முன்னாள் கணவரான, இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவுசெய்துள்ள செய்தியை கேள்விப்பட்ட நடிகை அமலாபோல், கண்கலங்கியதுடன் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
 
இயக்குநர்ஏ.எல்.விஜய் இயக்கிய “தெய்வத்திருமகள்” திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர் அமலாபால். அப்போது ஏ.எல்.விஜய்- அமலாபாலுக்கிடையே காதல் மலர்ந்தது. அதன்பிறகு தான் இயக்கிய “தலைவா” திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபாலை நடிக்க வைத்தார் ஏ.எல்.விஜய். அதுவரை காதலை மறுத்து வந்த அவர்கள் அந்த திரைப்படத்துக்குப் பிறகு காதலிப்பதை ஒத்துக்கொண்டனர்.

ஆனால், திருமணமாகி ஒரே வருடத்தில் ஏ.எல்.விஜய்-அமலாபாலுவின் குடும்ப உறவில் விரிசல் விழுந்தது. அதனால் பிரிந்து வாழ்ந்து வந்த அவர்கள் நிரந்தரமாக பிரிந்து விட நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த வாரத்தில் அவர்களது விவாகரத்து மனு ஏற்றுக்கொள்ளப் பட்டு சட்டப்படி அவர்கள் இருவரும் பிரிந்தனர். அதையடுத்து அமலாபால் அடுத்து திருமணம் குறித்து யோசிக்காமல் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், ஏ.எல்.விஜய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம். இந்த செய்தி அமலாபாலின் காதுக்கு வந்ததை அடுத்து சிறிது நேரம் கண்கலங்கியவர், படப்பிடிப்பு தளத்தை விட்டே வெளியேறி விட்டாராம்.


Share
Banner

Post A Comment: