Propellerads
Navigation

அலைபேசிகளைத் திருடிய மாணவன் கைது

பதுளை நகரிலுள்ள அலைபேசி விற்பனை நிலையமொன்றில், அலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின்பேரில், பாடசாலை மாணவனொருவரை, பதுளைப் பொலிஸார், நேற்று முன்தினம் கைதுசெய்துள்ளனர்.

அலைபேசிகளைக் கொள்வனவு செய்யும் பாணியில் மேற்படிக் கடைக்குச் சென்ற மாணவன், 3 அலைபேசிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில், வியாபார நிலைய உரிமையாளர், பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், மேற்படி மாணவனைக் கைதுசெய்துள்ளதுடன், அலைபேசி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

ஏனைய இரு அலைபேசிகளையும் அம்மாணவன், தனது நண்பர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Share
Banner

Post A Comment: