Propellerads
Navigation

ஈசிஆரில் இளையதளபதி விஜய் மற்றும் நித்யாமேனன்

தமிழக அரசியல் களமே ஈசிஆரில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டை வட்டமடித்து வரும் நிலையில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தின் படப்பிடிப்பும் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் விஜய், நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முன்னதாக நித்யாமேனன் கேரக்டரில் ஜோதிகா நடிக்கவிருந்ததும், பின்னர் எதிர்பாராத காரணத்தால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியதும் தெரிந்ததே

'தெறி' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ள அட்லி, இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக படமாக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தார் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், கோவை சரளா மற்றும் எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.
Share
Banner

Post A Comment: