பாலாஜி சக்திவேல் இயக்கிய 'வழக்கு எண் 18/9, மற்றும் சுசீந்திரனின் 'ஆதலினால் காதல் செய்வீர்' போன்ற படங்களில் நடித்த நடிகை மனீஷா யாதவ் பெங்களூரை சேர்ந்த தொழிபதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த திருமண அறிவிப்பை மனிஷா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'சென்னை 28' படத்தின் 2ஆம் பாகத்தில் 'சொப்பன சுந்தரி' என்ற ஐட்டம் பாடலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் மனீஷா யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிஷா யாதவ்வின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க நமது வாழ்த்துக்கள்
Post A Comment: