Propellerads
Navigation

விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா

இருமுகன்' வெற்றிக்கு பின்னர் சீயான் விக்ரம் தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் விக்ரமின் அடுத்த படத்தை 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விக்ரம்-விஜய்சந்தர் இணையும் படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின்படி இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையெனில் விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் வாய்ப்பை பெறுகிறார் தமன்னா. தமன் இசையமைக்கும் இந்த படத்தை சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
Share
Banner

Post A Comment: