Propellerads
Navigation

சசிகலாவை சந்தித்தாரா அஜித்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் தல அஜித், அவருடைய மறைவின்போது பல்கேரியா நாட்டில் இருந்தபோதும் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து சென்னைக்கு உடனே திரும்பி ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

தற்போது பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாட சமீபத்தில் அஜித் சென்னை வந்தார். இந்நிலையில் நேற்று மாலை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை போயஸ் கார்டனில் அஜித் சந்தித்ததாக வதந்தி ஒன்று மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஒருசில ஊடகங்களால் கூறப்பட்டபோதிலும் அஜித் தரப்பில் இப்படி ஒரு சந்திக்க நிகழவில்லை என்று உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது.
Share
Banner

Post A Comment: