Propellerads
Navigation

சென்னை காவல்துறை ஆணையரிடம் ராகவா லாரன்ஸ்-ஆர்.பி.செளத்ரி புகார்

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வந்த 'மொட்டசிவா கெட்டசிவா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் ஆர்.பி.செளத்ரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய அவர்கள், 'மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியீடு தொடர்பாக புகார் மனு அளித்தோம். லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா படம்' ஆரம்பத்தில் வேந்தர் மூவிஸ் மதன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால், சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் அந்த டைட்டில் மட்டும் வாங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரீலீசுக்கு தயாராக இருக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் சிலர் இடையூறு செய்து வருகின்றனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளோம்'' என்று கூறியுள்ளனர்.

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ராணி, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள 'மொட்டைசிவா கெட்டசிவா' படத்தை சாய்ரமணி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.
Share
Banner

Post A Comment: