நடிகைகள் உடம்பை காட்டுவதில்லை, தங்களது திறமையை தான் காண்பிக்கிறார்கள் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். கத்திச் சண்டை படத்தின் இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியில் நடிகைகள் பற்றிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதில், "கோடி கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகள் ரசிகனை திருப்திப்படுத்த குறைந்த ஆடையில் கவர்ச்சியாக நடிக்கத்தான் வேண்டும். நடிப்பு திறமையை காட்ட வேண்டும் என்றால் டி.வி.சீரியலில் நடிக்க வேண்டியதுதான்" என்று கூறியிருந்தார்.
இதற்கு நடிகை நயன்தாராவும், தமன்னாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். "பணம் வாங்கிக் கொண்டு நடித்தால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க வேண்டுமா, நடிகைகள் என்ன போகப்பொருளா, கவர்ச்சி பதுமைகளா" என்று கேட்டு, இயக்குனர் சுராஜ் நடிகைகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தனர். நடிகைகள் எதிர்ப்பால் இயக்குநர் சுராஜ் தன் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், இதுப்பற்றி நடிகர் விஷால் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛இயக்குநர் சுராஜ் தேவையில்லாமல் பேசியிருக்கிறார். நான் பொதுச்செயலாளராக பேசவில்லை, ஒரு நடிகராக பேசுகிறேன், நடிகைகள் ஒன்றும் உடம்பை காட்டுவதில்லை, தங்களது திறமையை தான் காட்டுகிறார்கள், இந்த விஷயத்தில் சுராஜ் மன்னிப்பு கேட்டது மகிழ்ச்சி, தமன்னாவிற்கு இந்த தர்மசங்கடம் தேவையில்லாத ஒன்று, சாரி தமன்னா'' என்று கூறியுள்ளார்.
Post A Comment: