ராம் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் வசந்த் ரவி, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடித்துள்ள படம் தரமணி. இந்தப் படத்தின் இசையை ரஜினிகாந்த் நாளை வெளியிடுகிறார். இது பற்றிய அறிவிப்பை இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ளார்.
ராம் - யுவன்ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார் கூட்டணியில் வெளிவந்த படங்களின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாக அமைந்தப் பாடல்கள்தான். இந்தக் கூட்டயில் வெளிவந்த தங்க மீன்கள் படத்தில் இடம் பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய்.. பாடல் நா.முத்துக்குமாருக்கு முதன் முதலாக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. நா.முத்துக்குமார் மறைவு ராம் - யுவன் ஆகியோருக்கு பெரிய இழப்புதான்.
தரமணி படத்தின் பாடல்கள் குறித்து நா.முத்துக்குமார் ஏற்கெனபே பெரிதும் பாராட்டிப் பேசியிருந்தார். அவர் இல்லாமல் தரமணி பாடல் வெளியாவது படக்குழுவினருக்கு ஒரு நெகிழ்வான நிகழ்வாகவே இருக்கும்.
Post A Comment: