நயன்தாரா இப்போது சோலோ ஹீரோயின் சப்ஜெக்டுகளில் நடித்து வருகிறார். யாருக்கும் ஜோடியாக இல்லாம் தனித்து தெரிகிற கதையாக தேர்வு செய்து நடிக்கிறார். அறம், டோரா ஆகிய படங்கள் அப்படிப்பட்டவைகள்.
இந்த வரிசையில் அவர் அடுத்து நடிக்கும் படமும் ஹீரோயின் சப்ஜெக்ட் கதை. அதனை இயக்குபவர் மிஷ்கின் உதவியாளர் பரத் கிருஷ்ணமாச்சாரி.இயக்குனர் மிஷ்கினிடம் சவுண்ட் டிசைனராகவும், உதவி இயக்குனருமாக இருந்த பரத் இப்போது நயன்தாராவிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டு உற்சாகமாக இருக்கிறார். இதுகுறித்து பரத் கூறியதாவது:
இயக்குனர் ஆகும் ஆசையில்தான் சினிமாவுக்கு வந்தேன். சினிமா தொழில்நுட்பம் ஒன்றை கற்றுக் கொண்டு உள்ளே நுழைவது எளிது என்ற தெரிந்து சவுண்ட் என்ஜினீயரிங் கற்றேன். பின்பு மிஷ்கின் சாரிடம் உதவியாளரானேன். நயன்தாராவை மனதில் வைத்து ஒரு கதை உருவாக்கினேன். நயன்தாரா அவ்வளவு சீக்கிரம் கதை கேட்க மாட்டார்.
கேட்டு பிடித்து விட்டால் முழு அர்ப்பணிப்போடு நடிப்பார் என்றார்கள். அவரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒரு வழியில் கிடைத்தது. அவரிடம் நான் உங்களை 12 வருடங்களாக கவனித்து வருகிறேன். உங்கள் அசைவு, மேனரிசம் எப்படி இருக்கும் என்பதை கவனித்து அதற்கேற்ப கேரக்டரை உருவாக்கி இருக்கிறறேன் என்கிற முன்னுரையோடு கதை சொன்னேன். கதை உடனே பிடித்து விட்டது. கையில் இருக்கும் படத்தை முடித்து கொடுத்து விட்டு இந்தப் படத்தை பண்ணுவோம் என்ற கூறியிருக்கிறார்.
இதில் அவர் பாரீசில் வாழும் தமிழ் பெண்ணாக நடிக்கிறார். அங்கு பத்திரிகையாளராக இருக்கிறார். தன் குடும்பத்தை தேடி அவர் பயணிப்பதுதான் கதை. அவர் குடும்பம் என்ன ஆனது? ஏன் தேடுகிறார்? கண்டுபிடித்தாரா? இல்லையாக என்கிற திரைக்கதை. பாரீசில் தொடங்கும் கதை ஜெர்மனி, போலந்து, மங்கோலியா நாடுகளில் பயணித்து இந்தியாவில் முடிகிறது. செழியன் ஒளிப்பதிவு செய்கிறார் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படப்பிடிப்புகள் தொடங்கும் என்கிறார் பரத் கிருஷ்ணமாச்சாரி.
Post A Comment: