Propellerads
Navigation

அஜித்துக்கும் எனக்கும் பிடித்த ஒரு விஷயம்... சஞ்சிதா ஷெட்டி

தல அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவுடன் பல நடிகைகள் இருக்கும் நிலையில் அவரை நேரில் சந்தித்து பேசினால் கூட போதும் என்றும் சிலர் இருக்கின்றனர்.

அந்த வகையில் அஜித்தை நேரில் சந்தித்து பேசியது குறித்து 'சூது கவ்வும்' நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டில் ஒன்றில் கூறியுள்ளார். நடிகை லட்சுமிமேனன் தனது நெருங்கிய தோழி என்றும், 'வேதாளம்' படப்பிடிப்பின்போது அவரை பார்க்க சென்றபோது அஜித்தை தற்செயலாக சந்தித்து பேசியதாக சஞ்சிதா கூறினார்.
சஞ்சிதா என்ற பெண்ணை இதற்கு முன் அவர் சந்தித்ததே இல்லை எனினும் பல வருடங்கள் பழகிய ஒருவரிடம் பேசுவது போல தன்னிடம் அஜித் கேஷூவலாக பேசியதாகவும், எனக்கும் சரி, அஜித்துக்கும் சரி சமையல் பிடித்த விஷயம் என்பதால் இருவரும் சமையல் குறித்து வெகுநேரம் பேசியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சஞ்சிதா பேட்டியளித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Share
Banner

Post A Comment: