Propellerads
Navigation

விஜய் நடனத்தை முயற்சி செய்த விக்ரம்

சீயான் விக்ரம் நடித்த 'இருமுகன்' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விக்ரம் படம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால் அவர் பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் 'இருமுகன்' படத்தின் புரமோஷனுக்கு சென்ற விக்ரம், அங்கு கூடியிருந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க விஜய்யின் குத்துபாட்டு ஒன்றுக்கு ஒருசில ஸ்டெப்கள் நடனமாடியுள்ளார். கேரளாவில் விஜய்யின் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவரது இந்த நடனத்திற்கு பெரும் கைதட்டல் கிடைத்தது.

அதேபோல் எப்போது நேரடி மலையாள படத்தில் நடிப்பீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது அதற்கு பதிலளித்த விக்ரம், 'ஐ யாம் வெயிட்டிங்' என்று பதில் கூறி விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளார்.
Share
Banner

Post A Comment: