Propellerads
Navigation

சென்னையில் மகேஷ் பாபு

தென்னிந்தியாவின் மிக அழகான நடிகரும் தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான மகேஷ்பாபுவும், இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவருமான ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களும் இணைந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே ஐதராபாத்தில் முடிந்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக  சென்னை அருகே அமைக்கப்பட்ட பிரமாண்ட அரங்கத்தில் 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்த மகேஷ்பாபு தமிழ் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி வரும் இந்த படம் வர்த்தக ரீதியாக புதியதொரு சாதனையை படைக்கும்" என்று தயாரிப்பாளர் மது கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: