கேடி படத்தில் தமிழுக்கு வந்த தமன்னா, பத்து ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதிலும் விஜய், அஜீத், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து இப்போது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். விஜயசேதுபதியுடன் தர்மதுரை, பிரபுதேவாவுடன் தேவி போன்ற படங்களில் நடித்திருப்பவர் அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் போன்ற வேறு சில ஹீரோக்களுடன் நடிப்பதற்காகவும் கதைகள் கேட்டு வருகிறார். மேலும், பாகுபலி, தோழா போன்ற இருமொழிப்படங்களின் வெற்றிக்குப்பிறகு தனது மார்க்கெட்டை இன்னும் ஸ்டெடி பண்ணி வருகிறார் தமன்னா.
மேலும், முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தபோதும், கதைதான் வெற்றியை தீர்மானிக்கிறது என்று சொல்லி கதை பிடித்தால் மட்டுமே ஓகே பண்ணுகிறார். அதுபற்றி தமன்னா கூறுகையில், படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளான நாங்கள் ஒவ்வொரு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் உழைக்கிறோம். ஆனபோதும் சில படங்கள் தோல்வியடைந்து விடுகின்றன. இதனால் அந்த கதையை நம்பி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அப்படி நஷ்டமடைந்த சில தயாரிப்பாளர்களை பார்த்து நான் வேதனைப்பட்டி ருக்கிறேன். அதனால இப்போது யாராவது தயாரிப்பாளர்கள் என்னிடம் கால்சீட கேட்க வந்தால், கதை பிடிக்காத பட்சத்தில் எனது கருத்தை அவர்களிடம் ஓப்பனாக சொல்லி விடுகிறேன். என்னை வைத்து படம் தயாரிப்பவர்கள் நஷ்டப்படக்கூடாது என்பதோடு, நான் நடிக்கிற ஒவ்வொரு படங்களுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருப்பதினாலேயே இப்படி சொல்லி விடுகிறேன் என்கிறார் தமன்னா.
Post A Comment: