மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மஞ்சிமா மோகன். அதையடுத்து, ஒரு வடக்கன் செல்பி -என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பைப்பார்த்து வியந்து போன கெளதம் மேனன், அந்த சமயத்தில் சிம்புவை வைத்து தான் இயக்கயிருந்த அச்சம் என்பது மடமையடா படத்திற்கு நாயகியாக ஒப்பந்தம் செய்தார். அந்த படத்தில் சிம்புவுடன் நடிக்கத் தொடங்கியபோதே பல கோலிவுட் இயக்குனர்களின் கவனத்தை இழுத்தார் மஞ்சிமா.
அதன்விளைவாக தற்போது அச்சம் என்பது மடமையடா படமே முடிவடையாத நிலையில், விக்ரம்பிரபுவுடன் முடிசூடா மன்னன் படத்தில் நடித்து வருகிறார் மஞ்சிமா. அதையடுத்து விஷ்ணு நடிக்கும் ஒரு புதிய படத்திற்கும் கமிட்டாகியிருக்கும் அவர், விஷால் நடிக்கும் சண்டக்கோழி-2 படத்திற்கும் ஒப்பந்தமாகி யிருக்கிறார். ஆக, தமிழில் நடித்த முதல் படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் மஞ்சிமா மோகன். அதோடு கெளதம் மேனன் படம் திரைக்கு வந்தால் அவருக்கு இன்னும் பெரிய ஹீரோக்களின் படவாய்ப்புகளும் கிடைக்கும் என்று தெரிகிறது.
இப்படி வந்தவேகத்திலேயே அதிரடியாக முன்னணி நடிகர்களின் படங்களில் மஞ்சிமா மோகன் கமிட்டாகி வருவதால், மார்க்கெட்டில் வளர்ந்து கொண்டி ருக்கும் இளவட்ட நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு, தாங்கள் பேசிக்கொண்டிருக்கும் புதிய படங்களும் மஞ்சிமா பக்கம் திரும்பி விடுமோ என்று அவர்கள் உள்ளூர அச்சத்தில் உள்ளனர்.
Post A Comment: