நிக்கி கல்ராணி நடித்திருக்கும் கோ 2 படம் வருகிற 13ந் தேதி வெளிவருகிறது. இதில் அவர் பாபி சிம்ஹா ஜோடியாகவும், பத்திரிகையாளராகவும் நடித்திருக்கிறார். கோ படம் தனக்கு பெரிய திருப்பத்தை தரும் என்று நம்புகிறார் நிக்கி. கோ படத்தில் நடித்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது:
புதுபுது வேடங்களையும், பலபல கதாப்பாத்திரங்களையும் நான் தேடி சென்ற போது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு தான் கோ 2. இந்த படத்தில் பத்திரிக்கையாளர் வேடத்தில் நடிக்கும் நான், அந்த கதாப்பாத்திரம் தத்ரூபமாக அமைய பல நிஜ பத்திரிகையாளர்களை பார்த்து அவர்களின் நடை, உடை, பாவனை மற்றும் அவர்களின் பேச்சு திறன், கேள்வி எழுப்பும் விதம், அவ்வளவு ஏன், அவர்கள் எப்படி தங்களின் மைக்கை பிடித்து கொண்டிருக்கிறார்கள் என்பது முதல் கொண்டு அனைத்தையும் கற்று கொண்டேன்.
என்னுடைய உழைப்பிற்கு ஏற்ற பலனை மக்களிடத்தில் நான் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அழகு மட்டுமே ஒரு நடிகைக்கு ஆதாரமாய் இருக்க முடியாது ,உழைப்பும் திறமையும் மிக மிக முக்கியம். இந்த படத்தில் என் அழகை விட நடிப்பையே பெரிதும் நம்பியிருக்கிறேன். என்னிடம் பேட்டி எடுக்கும் நிறைய பத்திரிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வேலை எவ்வளவு கடினமானது என்பதை கோ 2 வில் நடித்த போதுதான் உணர்ந்தேன். அவர்கள் மீது எனக்கு மரியாதை அதிகரித்திருக்கிறது. என்கிறார் நிக்கி கல்ராணி.
Post A Comment: