சூர்யா, சமந்தா நடித்துள்ள படம் 24. விக்ரம் குமார் இயக்கி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார். திரு என்கிற திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். 24 படம் வெளிவருதற்கு முன்பே திருவின் ஒளிப்பதிவு பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. படத்தின் டீசரில் ஒளிப்பதிவு தொழில்நுட்பம் பாராட்டுகளை குவித்துள்ளது. டைம் மிஷனை அடிப்படையாக கொண்ட 24 படத்தில் வெவ்வேறு காலகட்டங்களை வெவ்வேறு கலர் டோனில் காட்டுகிறார் திரு. படத்தின் டீசருக்காக மட்டும் 15 நாட்கள் மும்பையில் தங்கியருந்து பணியாற்றி இருக்கிறார்.
இதுபற்றி சூர்யா கூறியதாவது: 24 படத்தின் கதையை விக்ரம் குமார் சொன்ன உடனேயே என் மனதில் தோன்றியது. என்னை விட இயக்குனரை விட இந்த கதையில் ஒளிப்பதிவாளருக்கு பெரிய பொறுப்பு இருக்கிறது என்று. இயக்குனர் தான் திருவை அழைத்து வந்தார். 24 இந்த அளவுக்கு வெற்றிகரமாக வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் திரு தான்.
படப்பிடிப்பின்போது ஷாட் இல்லை என்றால் ஓய்வெடுக்க கேரவனுக்கு சென்ற விடுவேன். இயக்குனர் ஷாட் கட் சொல்லிவிட்டு ஓய்வெடுப்பார். ஓய்வே இல்லாமல் வேலை பார்த்த ஒரே நபர் திரு தான். எனக்கு 3 கெட்அப்கள், அந்த மூன்றையும் தனித்தனியே பிரித்து காட்டியதில் என் நடிப்பை விட திருவின் கேமராவுக்குத்தான் முக்கியத்தும் இருக்கிறது. படம் வெளிவந்த பிறகு திருவின் உழைப்பு பேசப்படும். என்கிறார் சூர்யா.
Post A Comment: