வில்லனாக நடித்த போக்கிரிராஜா படம் சரியாக போகாததில் வருத்ததில் இருக்கும் சிபிராஜ் அடுத்து காமெடி படத்தை தயாரித்து அதில் நடிக்க இருக்கிறார்.
வல்லினம் அறிவழகனின் உதவியாளர் மணிகண்டன் இயக்குகிறார். சிபிராஜ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. சூதுகவ்வும் பாணியிலான பிளாக் காமெடி படம். நடிகனாக ஜெயிக்க சிபிராஜ் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.
சிபிராஜ் தற்போது ஜாக்சன் துரை என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்த மாத இறுதியில் தேனாண்டாள் பிலிம்ஸ் படத்தை வெளியிடுகிறது.


Post A Comment: