Propellerads
Navigation

அஜித்துடன் மீண்டும் நயன்தாரா?


வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் வேலைகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் முடிசூடா மன்னன் என்ற படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தோடு முடிந்து விடுமாம். அதையடுத்து அஜித் நடிக்கும் படத்தை ஜூன் மாதம் முதல் தொடங்குகிறார்கள். அதனால் முக்கிய நடிகர் நடிகைகளிடம் கால்சீட் பேச்சுவார்த்தையும் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், அந்த படத்தில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்கிற முயற்சியும் நடக்கிறதாம். அந்த வகையில், நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா என பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. இதில் நயன்தாரா நடிக்கத்தான் அதிக வாய்ப்பிருக்கிறதாம். ஏற்கனவே அஜித்துடன் அவர் நடித்த பில்லா, ஆரம்பம் என்ற இரண்டு படங்களுமே ஹிட் என்பதால், அந்த செண்டிமென்டுக்காக அவர்களை ஜோடி சேர்க்க முயற்சி நடக்கிறதாம்.
Share
Banner

Post A Comment: