Propellerads
Navigation

'தெறி'க்குப் போட்டியாக 'மொ.சி.கெ.சி.'


விஜய்யின் அதிரடி ஆக்ஷன் நடிப்பில் வரும் தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளிவர உள்ள படம் 'தெறி'. இப்படத்தின் டீசரும், டிரைலரும் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. பாடல்களில் மட்டும் ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களை ஏமாற்றிவிட்டார். இதுவரை இல்லாத விஜய் பட அளவிற்கு 'தெறி' படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் வியாபாரமும் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு இருக்க வாய்ப்புள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே ராகவா லாரன்ஸ் நடித்துள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் 'தெறி'க்கு சரியான போட்டியாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. நேற்று இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரும், சிங்கிள் டிராக்கும் வெளியிடப்பட்டது. மோஷன் போஸ்டரையே டயலாக்குடன் ஒரு டீசர் போல வெளியிட்டுள்ளார்கள். 'காஞ்சனா' படங்களின் வெற்றிக்குப் பிறகு பேய்களை விட்டு ஆக்ஷன் நடிப்பிற்கு இறங்கியுள்ள ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் கலக்கான ஸ்டைல்களை வெளிப்படுத்தியுள்ளார் என்று படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா, காஞ்சனா 2' ஆகிய இரண்டு படங்களும் வசூலில் சாதனை புரிந்ததைப் போல 'மொட்ட சிவா கெட்ட சிவா' படமும் புரியும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Share
Banner

Post A Comment: