சமகாலத்து நடிகைகளான தமன்னா-சமந்தா ஆகிய இருவருமே தமிழ், தெலுங்கு படங்களில்தான் அதிகமாக நடித்து வருகின்றனர். இதனால் அவர் களுக்கிடையே தொழில் போட்டி இருப்பது போன்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதுகுறித்து சமந்தா கூறுகையில், சினிமாவில் என்னைப்போன்று எத்தனையோ நடிகைகள் நடித்து வருகின்றனர். ஆனபோதும் நான் யாரையும் எனக்கு போட்டியாக நினைப்பதே இல்லை. இன்னொருவரின் படத்தை நான் அபகரிக்க வேண்டும் என்றும் நினைத்ததே இல்லை. என்னைத்தேடி வரும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன்.
மேலும், இப்போதைய நடிகைகளில் என்னை அதிகமாக இம்ப்ரஸ் செய்த ஒரே நடிகை தமன்னா மட்டுமே. காரணம், அவர் ஹாட் ஒர்க் செய்வார். டெடிகேஷன் உள்ள ஆர்ட்டிஸ்ட். நடிப்பு என்று வந்து விட்டால் குறித்த நேரத்தில் ஸ்பாட்டில் ஆஜராகி விடுவார்.
அந்த அளவுக்கு தொழிலை மதிப்பார். இரவு பகல் என படப்பிடிப்பு நடந்தாலும் சளைக்காமல் நடிக்கக்கூடியவர். இதற்கெல்லாம் மேலாக இந்தி பெண்ணான அவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசுகிறார். அது பாராட்ட வேண்டிய விசயம் என்று தமன்னாவைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகும் சமந்தா, அவரது நடிப்பை எடுத்துக்கொண்டால் அவர் செய்யும் ரொமான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்கிறார்.


Post A Comment: