Propellerads
Navigation

தாய்மொழியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! -ஐஸ்வர்யா ராஜேஷ் பீலிங்ஸ்


2011ல் அவர்களும் இவர்களும் என்ற படத்தில் அறிமுகமானவர்தான் காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ். அதைத் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம், விளையாடவா, அட்டகத்தி, ஆச்சர்யங்கள், புத்தகம் என பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த அவர், ரம்மி படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்தபோதுதான் கவனிக்கப்படும் நடிகையானார். அதையடுத்து விஜயசேதுபதியே அவரை பண்ணையாரும் பத்மினியும் படத்தில் முழுக்கதாநாயகி ஆக்கினார். அதையடுத்து காக்கா முட்டை அவரை பேச வைத்தது.

ஆக, தற்போது அவர் கைவசம் பத்து படங்கள் வரை உள்ளது. இதற்கிடையே ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். அந்த வகையில், இரவு பகலாக பிசியாக நடித் துக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி தமிழ், இந்தி என பரவலாக நடிக்கத் தொடங்கியபோதும், தனது தாய்மொழியான தெலுங்கில் இன்னும் படவாய்ப்பு கிடைக்காதது அவருக்கு மனதளவில் வருத்தத்தை கொடுத் துள்ளதாம்.

இதுபற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், நான் படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னைதான். என்றாலும் எனது பூர்வீகம் ஆந்திரா. எனது தாத்தா அமர்நாத் தெலுங்கில் பல படங்களில் நடித்தவர். அதேபோல் எனது தந்தை ராஜேஷ் கிட்டத்தட்ட 40 தெலுங்கு படங்கள் வரை நடித்திருக்கிறார். அந்த வகையில், எனக்கும் தெலுங்கில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. ஆனால் வாய்ப்புகள்தான் கிடைக்கவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் தெலுங்கு சினிமா கதவுகள் எனக்காகவும் திறக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
Share
Banner

Post A Comment: