இளைய தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் புலி. இப்படத்தை அவரின் உதவியாளர் பி.டி.செல்வகுமாரே தயாரித்திருந்தார்.
இதை தொடர்ந்து ஜீவா நடிப்பில் போக்கிரி ராஜா என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இதன் சிங்கிள் ட்ராக் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ‘செல்வக்குமாரை ஒரு நாளும் நான் உதவியாளராக பார்த்தது இல்லை.
அவர் என் குடும்பத்தில் ஒருவர்.விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு கண்டிப்பாக செல்வகுமார் ஒரு காரணம், விஜய்யை பற்றி தவறாக ஏதும் பத்திரிக்கையில் வந்தால், முதல் ஆளாக சென்று சண்டையிடுவார், அந்த அளவிற்கு விஜய் மீது அன்பு கொண்டவர்’ என கூறினார்.


Post A Comment: