Propellerads
Navigation

காதலிக்க நேரம் இல்லை

ராய்லட்சுமி அவரது 50–வது படமாக 'ஜூலி 2' என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இது பற்றி அவரிடம் கேட்ட போது,

எனது 50வது படம் நல்லபடமாக அமைய வேண்டும் என்று விரும்பினேன். இப்போது 'ஜூலி 2' என்ற இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது நல்ல படம். நான் கவர்ச்சி வேடங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. என்றாலும் தேவைப்பட்டால் நடிப்பேன்.

'ஜூலி 2' படத்தில் ஒரு காட்சியில் 'பிகினி' உடையில் வர இருக்கிறேன். ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் சோனாக்‌ஷி சின்காவுடன் 'அகிரா' இந்தி படத்தில் நான் நடிக்கும் வேடமும் எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும்.

நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது பற்றிய எண்ணமோ, அதற்கான சூழ்நிலையோ இப்போது இல்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. அதற்கு நேரமும் இல்லை.

படப்பிடிப்புக்கு போகிறேன். எனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்க உடற்பயிற்சி செய்கிறேன். படப்பிடிப்பு, உடற்பயிற்சியிலேயே ஒரு நாள் முடிந்து விடுகிறது.

எனவே, காதலிக்க எனக்கு நேரம் இல்லை. காதல் என்று வந்தால் அதற்கு நேரம் ஒதுக்கவேண்டும். இல்லையென்றால் அந்த காதல் நீடிக்காது. எனவே காதல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
Share
Banner

Post A Comment: