Propellerads
Navigation

டைனோசர்கள் ரிட்டர்ன்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜுராசிக் பார்க்’, உலக சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல். அந்த பட காட்சிகளின் மிரட்சிதான் அப்பட ஹைலட். தொடர்ந்து அதன் 2வது, 3வது பாகங்கள் ரிலீசாகி வெற்றி பெற்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அதன் 4வது பாகம் ‘ஜுராசிக் வேர்ல்ட்’, வரும் 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இந்த படத்தை தயாரித்துள்ளார். காலின் ட்ரெவரொவ் இயக்கியுள்ளார்.

கதைப்படி, மத்திய அமெரிக்காவில் ஜுராசிக் பார்க் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான டைனோசர்கள் இருக்கின்றன. அந்த பார்க்கில் நடக்கும் ஒரு சிறு தவறால், டைனோசர்கள் கட்டுகாவலை மீறி அதகளம் செய்ய ஆரம்பிக்கின்றன.

மனிதர்களால் அதை சமாளிக்க முடிந்ததா? டைனோசர்களால் ஏற்படும் விபரீதங்கள் என்ன என்பதை திகில் உணர்வுகளுடன் படம் சொல்கிறது. யூனிவர்சல் தயாரித்துள்ள இந்த படம் 3டியில் தமிழிலும் வெளியாகிறது.
Share
Banner

Post A Comment: