Propellerads
Navigation

எனக்கு குழந்தையா?: பரபரப்பான டாப்சி

டாப்சி தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த 'வை ராஜா வை', 'காஞ்சனா–2' படங்கள் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடின. 

டாப்சியும் பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போயியும் காதலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் அடிக்கடி ஜோடியாக சுற்றுகிறார்கள். இவர்கள் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளிவந்துள்ளது. 

இந்த நிலையில் தான் டாப்சிக்கு குழந்தை பிறந்துள்ளாக திடீரென்று செய்திகள் வந்தன. பேஸ்புக், டுவிட்டரில் இச்செய்தி வேகமாக பரவியது. குழந்தை பிறந்ததால் மத்தியாஸ் போயி தனது போட்டி ஒன்றை ரத்து செய்து விட்டதாகவும் கூறப்பட்டது. 

இச்செய்தியை பார்த்து திரையுலகினர் அதிர்ச்சியானார்கள். ஆனால் மத்தியாஸ் போயின் விளையாட்டு பார்ட்னரான மாஸ்டன் மோமோசென் என்பவருக்குதான் குழந்தை பிறந்ததாம். அதைதான் டாப்சிக்கு குழந்தை பிறந்ததாக தவறாக நினைத்து இந்த வதந்தியை பரப்பி உள்ளனர். 

இந்த வதந்திக்கு பதில் அளித்த டாப்சி எனக்கு இப்போது நடிப்புதான் முக்கியம். அதில்தான் பிசியாக இருக்கிறேன் திருமணம், குழந்தை பற்றியெல்லாம் சிந்தித்து பார்க்கவே இல்லை. அதற்கு நேரமும் கிடையாது என்றார்.
Share
Banner

Post A Comment: