Propellerads
Navigation

குண்டு என்றவர்களுக்கு சரண்யாவின் கணவன் பதிலடி

“வேலாயுதம், யாரடி நீ மோகினி, அப்புக்குட்டி, வெண்ணிலா கபடிக்குழு உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன்.

திரைப்படங்களில் நடிக்கும்போது ஸ்லிம் ஆக இருந்த சரண்யாமோகன், குழந்தை பெற்றவுடன் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறியதை சமூக வலைத்தளங்களில் பலர் கேலியும் கிண்டலும் செய்தனர்.

இந்நிலையில், தனது குண்டு உடல் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தக்க பதிலடி ஒன்றை நேற்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

சரண்யாவில் பதிலுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் இன்று சரண்யாவின் கணவர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ண்ன்  தனது சமூக வலைத்தளத்தில், கேலிசெய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

 “நாட்டில் எத்தனையோ முக்கிய பிரச்சினைகள் இருக்கும்போது சரண்யா எடை அதிகரித்தது முக்கியமான பிரச்சினை இல்லை. என் மனைவி திருமணத்துக்கு பிறகு நடிக்கவில்லை. அதை நான் பாராட்டுகிறேன். அவர் தாயான பிறகு எடை அதிகரித்ததை கிண்டல் செய்பவர்களுக்கு நல்ல எண்ணம் இல்லை” என்று மலையாளத்தில் பதிவு செய்துள்ளார்.
Share
Banner

Post A Comment: