Propellerads
Navigation

காலா



தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கும் 12-வது படம் இது. ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ரஜினி நடித்த ‘கபாலி’ ஆகிய வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படம் இது.

‘காலா’ படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார்.

இவர்களுடன், ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட் டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் திரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்தி குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படம் ‘காலா’. இதன் படப்பிடிப்பு கடந்த 28 -ம் தேதி மும்பையில் தொடங்கியது. இந்த படத்தை, பா.ரஞ்சித் இயக்குகிறார்.
பாடல்கள் - கபிலன், உமாதேவி, ஒளிப்பதிவு - முரளி ஜி. இவர் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

கலை - டி.ராமலிங்கம், படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத், சவுண்ட் டிசைனர் - ஆன்டனி பி ஜெயரூபன், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - சாண்டி

‘காலா’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறுகிறது.
Share
Banner

Post A Comment: