Propellerads
Navigation

'அஜித் பரிசில் ஒரு டெக்னிக்கல் பிழை': விவேக்

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. அஜித்தும் விவேக்கும் ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை மிகவும் கவர்ந்ததாகவும், அந்த வாட்சின் அழகை பார்த்து பிரமித்த விவேக், என்றாவது ஒருநாள் தானும் அதுபோன்ற ஒரு வாட்சை வாங்கிவிடுவேன் என்றும் கூறினாராம்.

உடனே சற்றும் யோசிக்காமல், அஜித் தனது கையில் இருந்த வாட்சை கழட்டி விவேக்கில் கையில் அணிவித்ததாகவும், இதை பார்த்து விவேக் மெய்மறந்து போனதாகவும் ஒரு செய்தி உலாவி வந்தது.

இந்த செய்தி குறித்து ஒரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த விவேக், 'இந்த செய்தியில் கூறியபடி அப்படியே நடக்கவில்லை.

ஆனால் இப்போது அது பெரிய விஷயமில்லை. இந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் பிழையும் உள்ளது. அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ரோலக்ஸ் அல்ல, செய்கோ(Seiko) வாட்ச் என்றும், அஜித்தின் சிறந்த குணத்திற்கு இந்த நிகழ்ச்சியும் ஒரு சிறந்த உதாரணம் என்றும் விவேக் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: