பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் கடந்த ஓராண்டாகவே இந்தியா - பாகிஸ்தான் உறவில் சுமூகமான சூழல் இல்லாததால் இந்திய படங்கள் பாகிஸ்தானில் ரிலீஸாவதில் சிக்கல் நீடித்தது.
இருந்தாலும் அவ்வப்போது சில படங்கள் ரிலீஸாகின்றன. இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் நடித்துள்ள டியூப்லைட் படம் பாகிஸ்தானில் ரிலீஸாகாது என தெரிகிறது.
இந்திய விநியோகஸ்தர்கள் டியூப்லைட் படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டுகிறார்களாம்.
ஆனால் பாகிஸ்தானில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள், சல்மான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்கிறார்களாம்.
ஏனென்றால், ரம்ஜான் பண்டிகையின் போது டியூப்லைட் படம் ரிலீஸாவதால் அன்றைய தினம் பாகிஸ்தானில் வெளியாகும் அந்நாட்டு படங்களின் வசூல் பாதிக்கப்படும் என்பதால் சல்மான் படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
Post A Comment: