Propellerads

About

Navigation
Recent News

கார்த்திக் நரேன் படத்தில் ஸ்ரேயா

சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாலேயே துருவங்கள் பதினாறு படத்துக்கு கிடைத்த வெற்றிக்கு முழுப்பலனும் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் நரேனின் அப்பாதான் 4 கோடி செலவில் அந்தப் படத்தை தயாரித்தார். அவருக்குக் கிடைத்த லாபத்தைவிட, கமிஷன் அடிப்படையில் தியேட்டர் எடுத்து படத்தை திரையிட்டவர்களுக்கு அதிக லாபம் கிடைத்தது.

துருவங்கள் பதினாறு வெற்றியடைந்த பிறகு ரீமேக் ரைட்ஸ் உட்பட மற்ற ரைட்ஸை விற்ற பிறகே தயாரிப்பாளர் லாபம் பார்த்தார். முதல் படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியோடு அதன் இயக்குனர் கார்த்திக் நரேன் தன் அடுத்த பட வேளைகளில் மும்மரமாக இறங்கிவிட்டார். நரகாசூரன் என்ற தலைப்பிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.

அரவிந்த்சாமி இந்த படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களாக கதாநாயகி தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஸ்ரேயா கதாநாயகியாக நடிக்க தற்போது ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார்.

ரஜினி, விஜய் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்த ஸ்ரேயா தற்போது பட வாய்ப்பில்லாமல் இருக்கிறார். அவருக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் தன் படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு படத்தை போலவே இந்தப்படமும் க்ரைம் திரில்லர் படமாம்.



Share
Banner

Post A Comment: