Propellerads
Navigation

நயன்தாரா வீட்டு கதவை முதலில் தட்டிய தேவசேனா வாய்ப்பு

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா, தமன்னா என இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் தமன்னாவுக்கும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கும் சமமான அளவு முக்கியத்துவத்தை ஒதுக்கியிருந்தார் இயக்குனர் ராஜமௌலி.

ஆனாலும் முதல் பாக தமன்னாவை விட, இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்கா ரசிகர்களின் மனதில் நின்றுவிட்டார். அந்த கேரக்டருக்கு தனது மேம்பட்ட நடிப்பால் அனுஷ்காவை விட வேறு யாரும் சரியாக பொருந்தியிருக்க முடியாது என்றே என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்.

சரி.. இதே தேவசேனா கதாபாத்திரத்தில் ஒருவேளை நயன்தாரா நடித்திருந்தால்..? இந்த கேள்விக்கான பதிலை வேண்டுமானால் நாமாக கற்பனை பண்ணத்தான் வேண்டுமே தவிர, இந்த கேள்வி உண்மை தான்.

ஆம்.. பாகுபலி பட ஸ்கிரிப்ட் தயாரானதும் தேவசேனா வேடத்தில் நடிக்க இயக்குனர் ராஜமௌலி முதலில் நினைத்தது நயன்தாராவைத்தானாம்.

ஆனால் அந்த சமயத்தில் நயன்தாரா கைநிறைய படங்களுடன் பிஸியாக இருந்ததால் அவரால் ராஜமௌலி கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாமல் போயிற்றாம்.

நயன்தாராவின் இழப்பு அனுஷ்காவின் லாபமாக மாறிவிட்டது. இதேபோலத்தான் சிவகாமி கேரக்டரில் ஸ்ரீதேவி நடிக்க இருந்து அதேபோல தேதிகள் பிரச்சனையால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு மாறியதும் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று.



Share
Banner

Post A Comment: