இந்தி நடிகை கஜோல் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதளத்தில், நண்பர் ஒருவருடன் இறைச்சி சாப்பிட்ட வீடியோவை பதிவு செய்திருந்தார். கஜோல் சாப்பிட்டது தடை செய்யப்பட்ட மாட்டிறைச்சி என்று சமூக வலைதளங்களில், அவருக்கு எதிராக விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்தன.
இதற்கு நடிகை கஜோல் நேற்று விளக்கம் அளித்தார். அதில், “அது மாட்டிறைச்சி என்று சொல்லப்படுவது தவறான தகவல். வீடியோவில் காட்டப்பட்டது எருமை மாட்டின் இறைச்சி. இது சட்டப்பூர்வமாக கிடைக்கிறது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரம் என்பதாலும், மத உணர்வுகளை புண்படுத்தும் என்பதாலும், இந்த விளக்கத்தை அளிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
மராட்டியத்தில் மாட்டிறைச்சி தடை சட்டம் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment: