Propellerads
Navigation

பாபிசிம்ஹாவுக்கு கிடைத்த பதவி உயர்வு

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் முன்னேறியது மட்டுமின்றி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் கடந்த 2012ஆம் ஆண்டு பெற்றவர் நடிகர் பாபிசிம்ஹா. 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கிய பாபிசிம்ஹா, வெகுவிரைவில் 25 படங்களை முடித்துவிட்டு தற்போதும் பிசியான நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பாபிசிம்ஹா, தன்னுடன் 'உறுமீன்' படத்தில் நடித்த நடிகை ரேஷ்மி மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நடிகர் பாபி சிம்ஹா-ரேஷ்மி மேனன் தம்பதிகளுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் பாபிசிம்ஹா, தந்தை என்ற பதவியுயர்வை பெற்றுள்ளார். பாபிசிம்ஹா - ரேஷ்மி தம்பதிகளுக்கு நமது வாழ்த்துக்கள்

தற்போது 'பாம்புச்சட்டை', 'வல்லவனுக்கு வல்லவன்', 'திருட்டுப்பயலே 2', 'கருப்பன்', ஆகிய படங்களில் பாபிசிம்ஹா நடித்து வருகிறார்
Share
Banner

Post A Comment: