மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் 'விவேகம்' படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இருப்பினும் ஒரு அட்டகாசமான ஸ்டில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் 'விவேகம்' படத்தில் அஜித் பேசும் பஞ்ச் டயலாக் ஒன்று தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவிவருகிறது. அந்த பஞ்ச் டயலாக் இதுதான்:
'என்னை தோற்கடிக்கணும்ன்னு எல்லாரும் நினைக்கிறாங்க..நான் தோற்கணுமா இல்லையான்னு நான் தான் முடிவு செய்யணும்' என்பது தான் அந்த பஞ்ச் டயலாக். படிக்கும் போதே மாஸ் ஆக இருக்கும் இந்த டயலாக், அஜித் பேசும்போது கேட்டால் திரையரங்கமே அதிரும் என்பதை சொல்லவும் வேண்டுமா?
Post A Comment: