Propellerads
Navigation

ராணாவுக்கு வலதுகண் பார்வை பறிபோனதா?

சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் சாதனை வசூல் பெற்று வரும் 'எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தில் பிரபாசுக்கு அடுத்தபடியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் பல்வாள்தேவன் கேரக்டரில் நடித்த ராணாதான். அவருடைய வெறித்தனமான நடிப்பு, முறுக்கேறிய உடலமைப்பு ஆகியவையும் இந்த படத்தின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.

இந்நிலையில் படத்தில் பிரபாசுக்கு இணையாக உடல்வாகு பெற்றுள்ள ராணாவுக்கு வலது கண் தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ராணா, தனக்கு 10 வயது இருக்கும்போதே வலது கண்ணில் குறை ஏற்பட்டதாகவும், அறுவை சிகிச்சை செய்த போதிலும் தன்னால் வலது கண்ணில் நிறத்தை மட்டுமே பார்க்க முடியும் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் வலது கண் பிரச்சனையை தவிர வேறு எந்த பிரச்சனையும் தனக்கு இல்லை என்றும், அதனால் தான் பல்வாள்தேவன் கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன் தன்னால் நடிக்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: