Propellerads
Navigation

'விவேகம்' டீசரின் ரன்னிங் டைம்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் டீசர் வரும் 18ஆம் தேதி வியாழக்கிழமை வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

'விவேகம் டீசர் 64 வினாடிகள் அதாவது ஒரு நிமிடம் 4 வினாடிகள் இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான 'வேதாளம்' படத்தின் டீசர் வெறும் 45 வினாடிகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

'விவேகம்' படத்தின் ஒரு நிமிட டீசரில் பெரும்பாலும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளும் தீம் மியூசிக்கும் மட்டுமே இருக்கும் என்றும், அடுத்து வரவுள்ள டிரைலரில்தான் காஜல் அகர்வால் உள்ளிட்ட மற்ற கேரக்டர்களின் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் வளர்ந்து வருகிறது.
Share
Banner

Post A Comment: