நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளியான கடைசி படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான 'பூப்பறிக்க வருகிறோம்'. இந்த படத்திற்கு பின்னர் அவர் சிறிது காலம் உடல்நலமின்றி இருந்தார். பின்னர் 2001ஆம் ஆண்டு காலமானார்.
இந்த நிலையில் கடந்த 1997ஆம் ஆண்டு சிவாஜிகணேசன், மோகன்லால் இணைந்து நடித்த மலையாள படமான 'ஒரு யாத்ரா மொழி' என்ற திரைப்படம் தற்போது 20 வருடங்களுக்கு பின் டிஜிட்டலில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் இந்த படத்திற்கு 'பயணத்தின் மொழி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் பிரதாப் போத்தன் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு இயக்குனர் பிரியதர்ஷன் கதை எழுதியுள்ளார். ரஞ்சிதா, பிரகாஷ்ராஜ், நெடுமுடிவேணு, உள்பட இந்த படத்தில் பலர் நடித்துள்ளனர்.
நாம் மாற்றுவோம்
on our website
slider
Recent
Click here to load more...


Post A Comment: