Propellerads
Navigation

ஸ்கெட்ச்

கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “ ஸ்கெட்ச் “.

இந்த படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே. சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், ரவி கி‌ஷன், விஷ்வாந்த், மாலி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கலை-மாயபாண்டி, இசை -எஸ்.எஸ்.தமன், ஒளிப்பதிவு- சுகுமார், எடிட்டிங்-ரூபன், நடனம்-ஷோபி, பிருந்தா, ஸ்டண்ட் -ரவி வர்மன், தயாரிப்பு-மூவிங் பிரேம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- விஜய்சந்தர். இந்த படத்திற்காக விஜய்சந்தர் எழுதிய “கனவே கனவே புது கனவே” என்ற பாடலை நடிகர் விக்ரம் பாட தமன் இசையில் பதிவு செய்யப்பட்டது.

இந்த படத்திற்காக சென்னையில் மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டது. முப்பது நாட்களுக்கு மேல் அதில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

படம் பற்றி கூறிய இயக்குனர் விஜய் சந்தர், "வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் இந்த படம் புது மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தும். வட சென்னையில் பாமரர்கள், ஏழைகள் மட்டுமல்ல, படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களும் இருக்கிறார்கள் என்கிற ஸ்டைலிஷ் படமாக ‘ஸ்கெட்ச்‘ உருவாகி வருகிறது. பரபரப்பான ஆக்‌ஷன் படமாகவும் ‘ஸ்கெட்ச்’ தயாராகி வருகிறது” என்றார்.
Share
Banner

Post A Comment: