நடிக்கும் “விவேகம்” திரைப்படத்தின் டீசர் நள்ளிரவு வெளியிடப்பட்டது. “பாகுபலி” போன்று விவேகமும் ஹாலிவுட் தரத்திலான படம் என்கிற ரகசியத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது டீசர். அதுபற்றி ஒரு பார்வை..
ஹாலிவுட்டில் வெளிவரும் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில் விவேகம் டீசர் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளிலும், பனி மலையிலுல் அஜித் எதிரிகளை துரத்திச் செல்கிறார். வெளிநாட்டு வீதிகளில் தீவிரவாதிகளின் வெறிச்செயல் நடக்கிறது.
அண்டர்கிரவுண்டில் எதிரிகளுக்காக காத்திருக்கிறார். பிரமாண்ட அணைக்கட்டின் மீது விமானங்கள் பறந்து கொண்டிருக்க கீழே ராணுவ வீரர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நொடியும் மிரட்டலாக இருக்கிற அளவிற்கு இந்த 57 வினாடி டீசரை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா.
"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையிலும், நீ தோத்துட்டே.... நீ தோத்துட்டே...ன்னு உன் முகத்தை பார்த்து நீ ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர்.... எவர்... கிவ் அப்..." என்கிற பின்னணி குரலில் அனல் பறக்கிறது டீசரில்.
ராணுவ உடையில், தலையில் தொப்பியுடன் காட்சி தருகிறார் அஜித், நவீன துப்பாக்கியால் சுடுகிறார். நவீன குண்டுகளை வீசுகிறார்.
பனிமலை மரத்தில் உடற்பயிற்சி செய்கிறார். மரத்தை உடைக்கிறார். மிரட்டலாக இருக்கிறது. பாகுபலி போன்று இதுவும் பட்டைய கிளப்பும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.
Post A Comment: