சிம்பு நடித்து வரும் 'AAA' என்ற 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இந்த படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் தந்தை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதுகுறித்து ஆதிக் கூறும்போது, 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' படப்பிடிப்பின்போதே என் தந்தையிடம் 'AAA' படத்தின் கதையை தெரிவித்தேன்.
சிம்பு இந்த படத்தில் நடிக்கின்றார் என்பது தெரிந்தவுடன் படப்பிடிப்புக்கு கிளம்புவதற்கு முன்னர் என்னிடம் அவர் முழு கதையையும் கேட்டார். பின்னர் அவரே ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார்.
படப்பிடிப்பின்போது எனது தந்தையுடன் நெருங்கி பழகிய சிம்பு, அவருடைய நெருக்கமான நண்பர்களில் ஒருவராக மாறிவிட்டார்.
ஆனால் அதே நேரத்தில் எனக்கும் சிம்புவுக்கும் மட்டும் தெரிந்த ஒருசில ரகசியங்களை சிம்பு, என் தந்தையிடம் கூறி என்னை மாட்டிவிட்டார் என்பதும் ஜாலியான ஒன்று' என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
பாடல்கள் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளது.
Post A Comment: