Propellerads
Navigation

ஒரே நேரத்தில் 8 படங்கள் அசத்தும் அமலாபால்

இயக்குனர் விஜய்யிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு அமலா பாலின் திரைப் பயணம் டாப் கீயரில் போய் கொண்டிருக்கிறது.

தெலுங்கில் கிச்சா சுதீப் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ஹெப்புலி படம் 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் கமர்ஷியல் ஹீரோயினாகிவிட்ட அவர் வீட்டு முன் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது அவர் 8 படங்களில் நடித்து வருகிறார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாகத் தயாரிக்கப்படும் “வேலையில்லா பட்டதாரி 2” படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் எண்டர்டெயன்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகும் “திருட்டு பயலே” படத்தில் பாபி சிம்ஹா மற்றும் பிரசன்னா இருவருக்கும் போட்டி போடும் வகையில் சவாலான வேடம்.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் முண்டாசுப்பட்டி இயக்கிய ராம் இயக்கும் “மின்மினி” படத்தில் விஷ்ணு விஷாலுக்குக் ஜோடியாக நடிக்கிறார். பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக “பாஸ்கர் தி ராஸ்கல்” படத்தில் நடிக்கிறார். சென்சுரியன் பிலிம்ஸ் ஜோன்ஸ் மற்றும் ஷாலோம் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் அமலாபால்தான் ஹீரோயின்,

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் மளையாள ரீமேக்கில் கங்கனா ரணாவத் கேரக்டரில் நடிக்கிறார் இதனை ரேவதி இயக்குகிறார். கண்ணன் இயக்கத்தில் உருவாகும் “அச்சாயன்ஸ்” மளையாளப் படத்தில் நடிக்கிறார். அனூப் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரில்லர் நடிக்கிறார். இப்படி ஒரே நேரத்தில் 8 படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதுதவிர 4 படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. கைவசம் அதிக படங்கள் இருப்பதாலும் வடசென்னை படம் அவர் கொடுத்திருந்த தேதிகளில் படமாகாமல் போனதாலுமே வடசென்னை படத்திலிருந்து விலகிக் கொண்டார்.
Share
Banner

Post A Comment: