Propellerads
Navigation

'பாகுபலி 2' படத்தில் தமிழின விரோதி

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை செய்து வருகிறது. 

இந்த படத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும், அனைத்து திரையுலக பிரபலங்களும் பாசிட்டிவ் விமர்சனங்கள்தான் கொடுத்துள்ளது. கமால் ஆர்.கான், தங்கர்பச்சான் போன்ற வெகுசிலரே இந்த படத்திற்கு எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

 'பாகுபலியை அப்படி இப்படி விமர்சனம் செய்தால் அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன்' என்று சமுத்திரக்கனி டுவீட் செய்ததால் எதிர்மறை விமர்சனம் செய்ய நினைத்தவர்களும் அடங்கிவிட்டார்களா? என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இந்த படத்தில் தமிழ் பின்னணி பேசியவர்களின் உச்சரிப்பு குறித்த குறையை சுட்டிக்காட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

பாகுபலி அற்புதமான முயற்சி. அந்தக் கடுமையான உழைப்பையும், மெனக்கெடலையும் மனதார பாரட்டுகிறோம். சாதனைகளை முறியடிக்கிற வசூல் உங்கள் தரிசனத்துக்கு கிடைத்த வெகுமதி. உங்கள் வெற்றியில் நாங்களும் மகிழ்கிறோம்.

தமிழனாய் ஒரு சின்ன நெருடல். தமிழ் உச்சரிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். பிழையான சில இடங்களில் மனது நொந்தது. உங்கள் மேல் தவறில்லை. ஏனெனில், இது உங்கள் மொழியில்லை. தமிழுக்குப் பொறுப்பேற்றவர்கள் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும். கதாபாத்திரங்களைப் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சிலர் மனம் நோகும்.

ஹிந்தியிலோ, தெலுங்கிலோ, மலையாளத்திலோ இப்படித் தவறுகள் நிகழுமா? அதைப் பொறுத்துக் கொள்வார்களா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்களோ இல்லையோ, நான் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? தவறான உச்சரிப்புகளை அடையாளம் காண இந்தத் தமிழ்நாட்டில் உங்களுக்கு ஒரு தமிழன் கிடைக்கவில்லையா? அல்லது, இங்கு இல்லவே இல்லை என்று சொல்கிறீர்களா? தமிழனுக்கு தமிழன்தான் விரோதி என்று சொல்வார்கள்; இப்பொழுது தமிழுக்கும் தமிழன்தான் விரோதி போலும்!

இவ்வாறு ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.
Share
Banner

Post A Comment: