காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி பொறுப்பாளரும், நடிகையுமான நக்மாவும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேற்று மதுரை வந்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, 'டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தில் நானும் பங்கேற்கவுள்ளேன். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறினார்.
மேலும் தமிழக அரசை, மத்திய அரசு இயக்கி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நடிகை நக்மா தீவிர அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார் என்பதையே இந்த பேட்டி தெரிவிக்கின்றது.
Post A Comment: