தமிழகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் உள்ளது. மக்களின் நன்மதிப்பை இழந்தவர்கள் ஆட்சி செய்து கொண்டிருப்பதால் மக்கள், ஒரு உண்மையான, ஆளுமையுள்ள, நேர்மையான, யோகியை போன்ற தன்னலமில்லாத அதிரடி தலைவரை தேர்வு செய்ய விரும்புகின்றனர். இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் பலர் ஊழல் குற்றச்சாட்டுடன் இருப்பதால் ஒரு புதிய தலைவர் உருவாகும் நேரம் வந்துவிட்டதாகவே தமிழக சூழல் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் சென்னையின் ஒருசில இடங்களில் 'மக்கள் வாழ வேண்டும் என்றால் நீங்கள் ஆள வேண்டும்' என்ற வாசகங்களுடன் ரஜினியின் போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டரை கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு மன்றம் நகரத்தின் பல இடங்களில் ஒட்டியுள்ளதாக தெரிகிறது.
அரசியலுக்கு வருவதும் வராததும் ரஜினியின் முழு உரிமை. அவரை அரசியலுக்கும் வருமாறு கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அதே நேரத்தில் தன்னால் தமிழக மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியும் என்று அவர் கருதினால் 1996க்கு பின்னர் இன்றைய சூழ்நிலை சரியானது என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது. ரஜினி என்ன முடிவெடுப்பார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Post A Comment: