சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படம் இரண்டு பாகங்களில் வெளிவரும் என்றும், சிங்கிள் பாடல் விரைவில் வெளிவருகிறது என்றும், நேற்று வெளியான தகவலால் டுவிட்டர் தெறிக்க ஆரம்பித்தது.
சிம்புவின் ரசிகர்கள் இதுகுறித்து சுமார் 20 ஹேஷ்டேக்குகள் ஏற்படுத்தி கிட்டத்தட்ட அனைத்தையும் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் இரண்டு பாகமாக வெளிவரவுள்ள 'AAA' படத்தின் முதல் பாகம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படத்தில் ஆன்மீகம் கலந்த ஒரு பாடல் இருப்பதாகவும், சிம்புவே எழுதியுள்ள இந்த பாடலின் ஒருசில வரிகளும் நேற்று சமூக இணையதளங்களில் வெளியாகியது. அந்த வரிகள், 'யாருடா நான்னு கேட்பவன் புத்திசாலிடா, நான் யாரு தெரியுமான்னு கேட்பவன் கோமாளிடா' என்றும் வருகிறது. இந்த வரிகளும் நேற்று டிரெண்டில் வந்தவைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதூ.
சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, நீது சந்திரா, சனாகான், மகத், விடிவி கணேஷ், கோவை சரளா, ராஜேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
Post A Comment: